Enable Javscript for better performance
நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா: போலீஸார் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நகைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா: போலீஸார் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டு, தேவிகாபுரம் பகுதிகளில் நகைக் கடைகளில் திருட்டைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அதன் உரிமையாளர்களிடம் சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வலியுறுத்தினார்.
    மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகள், நகை அடகுக் கடைகளை நோட்டமிட்டு, மர்ம கும்பல் நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே, நகைக் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவின்பேரிலும், துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் அறிவுறுத்தலின் படியும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையில், நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சேத்துப்பட்டு, தேவிகாபுரம் பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், அடகுக்கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், காவல் ஆய்வாளர் செல்வி பேசுகையில், விலைமதிப்புள்ள நகைகளை வியாபாரம் செய்யும் நகைக்கடை உரிமையாளர்கள், உங்கள் கடையின் பாதுகாப்பு, நான்கு புறங்களிலும் உள்ள சுவர்கள், பாதுகாப்பு பெட்டகத்தின் உறுதித்தன்மை ஆகியவற்றை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
    அனைத்துக் கடைகளிலும் நவீன வகையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
    மேலும், கடையின் பூட்டையோ அல்லது சுவற்றையோ மர்மநபர்கள் உடைத்தால் உரிமையாளர்களுக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தரும்படியான அலாரங்களை பொருத்த வேண்டும். அனைத்துக் கடைகளுக்கும் திடகாத்திடமான நபர்களை இரவுக் காவலாளிகளாக நியமிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai