Enable Javscript for better performance
பள்ளிகளிடையே விளையாட்டுப் போட்டி: செய்யாறு பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளிடையே விளையாட்டுப் போட்டி: செய்யாறு பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு, தனியார் பள்ளி மாணவிகள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் செய்யாறு விவேகா பன்னாட்டு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
    அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் வந்தவாசி எஸ்.ஆர்.ஐ கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் விவேகா பன்னாட்டு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
    இதில், கேரம்போர்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் சக்திபிரேமா, சசிபிரபா ஆகியோர் வெற்றிபெற்ற முதல் இடத்தைப் பிடித்தனர். இதே போன்று குண்டு எறிதல் போட்டியில் ஹேமலதா வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
    விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு ஆகியோரை பள்ளி நிறுவனர் கே.சோமசுந்தரம், தாளாளர் எஸ்.சரஸ்வதி, முதல்வர் ஜி.தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai