Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் அக்டோபர் 17 முதல் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. எனவே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, வரும் திங்கள்கிழமை (அக்.17) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும் என்று ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai