Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
    செய்யாறை அடுத்த அனக்காவூர் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (37). இவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால், அதனை சரி செய்யும் பணியில் பெருமாள் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர், எதிர் வீட்டைச் சேர்ந்த தொழிலாளி சக்திவேல் (34), பெருமாள் வீட்டுக்குச் சென்று அவருக்கு உதவி புரிந்துள்ளார்.
    அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சக்திவேல் உயிரிழந்தார். பெருமாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அனக்காவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai