Enable Javscript for better performance
முற்றுகைப் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 21 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முற்றுகைப் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 21 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) கட்சியைச் கட்சியைச் சேர்ந்த 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் எதிரே திரண்டனர். பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைமை தபால் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
    இதையடுத்து, கட்சியின் நகரத் தலைவர் ஜாபர் அலி தலைமையிலான 21 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai