Enable Javscript for better performance
விவசாயி மீது தாக்குதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    மங்கலத்தை அடுத்த மாதலம்பாடி கிராமம், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம் (39). இதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
    கடந்த 12-ஆம் தேதி சிவலிங்கம் வீட்டில் இருந்தபோது, ராஜேந்திரன், அவரது மகன் சத்தியசீலன் (26), உறவினர்கள் ஏழுமலை (45), பூபாலன், சர்க்கரை ஆகியோர் வந்து அவரை சரமாரியாக தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த சிவலிங்கம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, சிவலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் தனித்தனியே மங்கலம் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்து சிவலிங்கத்தை தாக்கிய சத்தியசீலன், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai