திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளி ஆசிரியரை வாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் (26).
இவரது தம்பி ஒரு மாதத்துக்கு முன்பு நாடகம் ஒன்றில் பெண் வேடத்தில் நடித்தாராம். இதை அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (26), அவரது அண்ணன்கள் தமிழரசன் (28), அன்பரசன் (30), உறவினர் சங்கர் (28) ஆகியோர் கிண்டல் செய்தனராம்.
எனவே, பாஸ்கரனுக்கும், இளவரசன் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பாஸ்கரன் வீட்டில் இருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த இளவரசன் உள்ளிட்ட நால்வரும் வாளால் பாஸ்கரனை வெட்டினராம். தடுக்க வந்த பாஸ்கரனின் தந்தை ராஜேந்திரன், தாய் மாணிக்கம் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த பாஸ்கரன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து இளவரசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.