பதவி உயர்வு வழங்கக் கோரி, திருவண்ணாமலையில் அரசு கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறையில் 25 முதல் 28 ஆண்டுகளாகப் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கால்நடை பராமரிப்பு இயக்குநர் பரிந்துரை செய்தும் பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலை, கால்நடை மருத்துவமனை இணை இயக்குநர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தீனதயாளன் தலைமை வகித்தார்.
கோட்டச் செயலர்கள் ராஜ்குமார், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் முரளி, அருள், மணிமாறன், திருப்பதி, ஆனந்தன், கவிதா உள்பட 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.