போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமி ஊர்வலத்துக்காக அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்த சவண்குமார் குழுவினரின் பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியக் குழுவைச் சேர்ந்த சம்பத்குமார் மகன் சவண்குமார் (20), வின்சென்ட் மகன் விநாயகம் (20), மணி மகன் சக்தி (22), அஜித்குமார் ஆகியோர் பேண்ட் வாத்தியம் வாசித்துக்கொண்டு, நடனமாடியபடி சென்றனராம்.
அப்போது, அந்தப் பகுதியில் பைக்கில் சென்ற அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன், வழி விடுமாறு பேண்ட் வாத்தியக் குழுவினரிடம் கேட்டாராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து பார்த்திபன் போளூர் காவல் நிலையத்தில் சவண்குமார், விநாயகம், சக்தி, அஜித்குமார் ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் வழக்குப் பதிந்து, சவண்குமார், விநாயகம், சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், பார்த்திபன் மீது புகார் அளிக்க வந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அஜீத், சுரேஷ், பிரசாந்த், கருணாநிதி ஆகிய 4 பேரும் தன்னை தாக்கியதாக விநாயகத்தின் தந்தை வின்சென்ட், போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மேலே குறிப்பிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.