செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
புதுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2 இடங்களில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவறை கட்டடப் பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கழிவறைகள் தரமாக கட்டப்பட்டுள்ளனவா, தண்ணீர் வசதி உள்ளதா என புதுப்பாளையம் செயல் அலுவலர் சுகந்தியிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும், புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பசுமை வீடு கட்டும் பணிகள் குறித்தும் கேட்டறிதார். அதனைத் தொடர்ந்து, புதுப்பாளையம் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதா, குடிநீர்த் தட்டுப்பாடுள்ள பகுதிக்கு குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் கேட்டறிந்தார். உடன், பேரூராட்சிகளின் உதவிச் செயற்பொறியாளர் இசக்கி, இளநிலை பொறியாளர் நாகராஜன், பணி
மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.