திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தச்சம்பட்டு, மங்கலம் உள் வட்டங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை வட்டத்துக்கான 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜமாபந்தியின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை தச்சம்பட்டு உள் வட்டத்துக்கு உள்பட்ட நவம்பட்டு, பெரிய கல்லப்பாடி, பெருமணம், தேவனூர், ஆருத்திராப்பட்டு, பனையூர் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
மேலும், மங்கலம் உள் வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிவாகை, தெள்ளானந்தல், குன்னியந்தல், துர்க்கைநம்மியந்தல், கிளியாப்பட்டு, வட ஆண்டாப்பட்டு, குன்னுமுறிஞ்சி, ஆர்ப்பாக்கம், நூக்காம்பாடி, வி.நம்மியந்தல், ராந்தம், மங்கலம், பாலானந்தல் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
எனவே, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களது வருவாய்த் துறை தொடர்பான குறைகள், கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று வட்டாட்சியர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.