ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மாதந்தோறும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
ஆவணி மாத பௌர்ணமி: இந்நிலையில், ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) பகல் 12.09 மணி முதல் புதன்கிழமை (செப்டம்பர் 6) பகல் 12.49 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
2-ஆவது நாளாக கிரிவலம்: அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.