வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றனர்.
இதில், செம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.என்.அன்பழகன், தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நல்லாசிரியர் விருதை பி.என்.அன்பழகனிடம் வழங்கினார்.
மேலும், மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எ.ரவிச்சந்திரன், வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியையும், எழுத்தாளருமான அ.வெண்ணிலா ஆகியோர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இருவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.