கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயன்நல்லூர் ஊராட்சியில் கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் மானியத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரப்பும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கலசப்பாக்கம் வேளாண்மைத் துறை சார்பில், அட்மா திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜெ.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சி மூலம் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்புத் திட்டம், நீர் பாசனத் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம், எண்ணை வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கம், விதை கிராம திட்டம், கூட்டு பண்ணைத் திட்டம் ஆகியவை குறித்தும், இந்தத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்தும், பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் கிராமியக் கலை மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
அட்மா திட்டப் பணியாளர்கள் மு.வீரபாண்டியன், அசோக்குமார், பிரேம்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மேலாரணி, வில்வாரணி, கச்சேரிமங்கலம், மேல்வில்வராயன்நல்லூர் உள்பட சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.