நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை கல்லூரிப் பகுதியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.