Enable Javscript for better performance
இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 01st March 2017 04:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cow

     

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை (மார்ச் 1) கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவசத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இதில், 4 மாத கன்றுகள் முதல் அனைத்து பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படும். இதற்கென 75 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் 7.16 லட்சம் கால்நடைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட உள்ளது.
    எனவே, மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்தத் தடுப்பூசி போடப்படும் நாள்களில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai