கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
By DIN | Published on : 01st March 2017 09:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட ஓசூர், தேசூர் உள்வட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓசூரில் நடைபெற்ற ஓசூர் உள்வட்ட தேர்தலில் புதிய தலைவராக முனியப்பன், செயலராக ஆனந்தன் ஆகியோரும், தேசூரில் நடைபெற்ற தேசூர் உள்வட்ட தேர்தலில் புதிய தலைவராக தமிழ்மாறன், செயலராக அதியமான்
ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
வந்தவாசி வட்டத் தலைவர் மு.பிரபாகரன், செயலர் எம்.குமார், பொருளர் எம்.கணபதி, இணைச் செயலர் எ.ஆதம், மகளிரணித் தலைவர் எஸ்.தானியலட்சுமி உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.