Enable Javscript for better performance
செங்கம் தமிழ்ச் சங்க6-ஆவது இலக்கிய விழா- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் தமிழ்ச் சங்கம் சார்பில், 6-ஆவது இலக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு வழக்குரைஞரும், தமிழ்ச் சங்கச் செயலருமான கு.கஜேந்திரன் தலைமை வகித்தார். துணைச் செயலர் கிருட்டிணன் வரவேற்றார். இதில், செங்கம் பகுதியைச் சேர்ந்த எவரஸ்ட் சிகரம் தொட்டவரும், கர்நாடக மாநில வன அதிகாரியுமான பிரபாகரன், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் வெ.பெருவழதி, சாகித்ய அகாதெமி, யுவ புரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் வீரபாண்டியன் ஆகியோரை பேராசிரியர் அபு பாராட்டி, தமிழ்ச் சங்கம் சார்பில் விருதுகளை வழங்கிப் பேசினார்.
    மாலையில் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்கக் காரணம் கற்பனை நலமே, கருத்து வளமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமை வகித்தார்.
    தமிழ்ச் சங்கப் பொருளரும், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியருமான பா.ஜெயவேல் வரவேற்றார்.
    பட்டிமன்ற நடுவராக நகைச்சுவை நாவலர் மா.இராமலிங்கம் கலந்துகொண்டார்.
    இதில், பேராசிரியர்கள் தமிழரசி, ரங்கராஜா, அரிப்பிரியா, கவிஞர் மு.க.சங்கர் ஆகியோர் பேசினர்.
    விழாவில் கணேசர் குழும உரிமையாளர் ரவீந்திரன், மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  மருத்துவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai