சுடச்சுட

    

    ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 01st March 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தென்கரை கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தெள்ளாறு மேற்கு ஒன்றியச் செயலர் வி.தங்கராஜ் தலைமை வகித்தார். தெள்ளாறு முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சி.சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, ஒன்றிய அவைத்தலைவர் பி.முனிரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. கல்விக்குழுத் தலைவர் எ.விஜய், பேரவை ஒன்றிய துணைத் தலைவர் எ.கன்னியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி வெங்கடேசன், கடம்பை வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதேபோல, வந்தவாசி நகர அதிமுக சார்பில் வந்தவாசி தேரடியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் பேசினர்.
    மேலும், வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, முன்னாள் தொகுதிச் செயலர் கே.பாஸ்கர், பேரவை நகரச் செயலர் வி.மேகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai