சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு காலதாமதம் இல்லாமல் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.
  தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் விரைந்து செயல்படாத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டிப்பது.
  பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும். குடிநீர்ப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். ஏரிகளை தூர்வார வேண்டும். இராயண்டபுரம், தண்டராம்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பாஜக தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். தண்டராம்பட்டு நகரத் தலைவர் சேகர் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் ராஜ்குமார், தயாநிதி, பாரதிவேலு, ஜெயந்திசிவா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  முன்னாள் மாவட்டத் தலைவர்கள் விஜயன், தருமன், மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், சுந்தரமூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய பொதுச்செயலர் குபேந்திரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai