Enable Javscript for better performance
பழுதடைந்த சிறு பாலங்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    போளூர் - சேத்துப்பட்டு சாலையில் சேதமடைந்த சிறு பாலங்களை அகற்றி, புதிய பாலங்கள் அமைக்கும் வகையில், சேதமடைந்த பாலங்களை கணக்கெடுக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    போளூர் - சேத்துப்பட்டு சாலை வழியாக வந்தவாசி, மேல்மருத்துவத்தூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள், பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போளூர் - சேத்துப்பட்டு சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள சிறு பாலங்களை அகற்றி, புதிய பாலங்கள் அமைக்கும் வகையில், சேதமடைந்த பாலங்களை கணக்கெடுக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் தொடங்கியது. சாலை ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் சாலைப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai