Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில்வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு

    By DIN  |   Published on : 01st March 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
    இளங்கலை இயந்திரவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் வி.திருநாவுக்கரசு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயந்திரவியல் துறைத் தலைவர் பி.ராமசாமி வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிரீவியஸ் காட்டன் நிறுவனத்தின் பொது மேலாளர் வி.ஆறுமுகம் கலந்துகொண்டு பேசியதாவது:
    இயந்திரவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக பெருகிக்கொண்டு வருகின்றன. இதற்குக் காரணம் மத்திய அரசு அறிவித்துள்ள மேக் இன் இந்தியா, எழு இந்தியா போன்ற திட்டங்கள் ஆகும்.
    நீங்கள் படிக்கும்போது உங்கள் தனித்திறமையை கண்டறிய வேண்டும். மேலும், புதிய உற்பத்தி யுக்திகளை தெரிந்துகொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் உங்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார். சி.ஆறுமுகம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai