சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் இயங்கி வரும் நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி மோசடி செய்ததாகக் கூறி, அந்த நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலை அண்ணா சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
  மாதத் தவணையாக 5 ஆண்டுகள் பணம் செலுத்தினால், முதிர்வின்போது கூடுதலாக பணம் வழங்கப்படும் என்று முகவர்கள் மூலம் தெரிவித்தனர். மேலும், மாத தவணைத்தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்றும் கூறினர்.
  அதனை நம்பி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.7 கோடி வரை தனியார் நிறுவனத்தில் செலுத்தி உள்ளோம்.
  இந்நிலையில், முதிர்வுக் காலம் முடிந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பித் தராமல் நிதி நிறுவனத்தினர் அலைக்கழித்து வருகின்றனர். பணம் செலுத்தியவர்கள் பலர் கூலித் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்றனர்.
  எனினும், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதும், பணியில் இருந்த பணியிலிருந்த அலுவலர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர். பின்னர், நிதி நிறுவனத்தில் நீண்ட நேரம் காத்திருந்த வாடிக்கையாளர்கள், புதன்கிழமை மீண்டும் முற்றுகையிட உள்ளதாகவும், அன்றைய தினம் நிதி நிறுவனத்தினர் உரிய பதில் அளிக்காவிட்டால், போலீஸில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறிவிட்டுச் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai