சுடச்சுட

  

  அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தேர்வர்களுக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி. ஐஏஎஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.
  திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் துணை நிறுவனம் எஸ்.கே.பி. ஐஏஎஸ் அகாதெமி. இங்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கி நிர்வாகங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுக்காக எஸ்.கே.பி. ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற இ.சரளா, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறையில் சென்னையில் பணியில் சேர்ந்துள்ளார். இதேபோல, எஸ்.சுப்பிரமணி வனத்துறை அலுவலர் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
  இந்த அகாதெமியில் சேர்ந்து இலவசமாகப் பயில விரும்புவோர் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு 9489042429 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று அகாதெமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai