Enable Javscript for better performance
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் போராட்டம்

    By DIN  |   Published on : 02nd March 2017 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை மேலாளரைக் கண்டித்து, ஊழியர்கள் புதன்கிழமை அதிகாலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    பேர்ணாம்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சென்னை, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    இந்தப்பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், பணிமனை மேலாளர் புண்ணியமூர்த்திக்கும், சில ஊழியர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
     இந்நிலையில், புண்ணியமூர்த்தி ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஊழியர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து தகவல் அறிந்த முதுநிலை துணை மேலாளர் (வணிகம்) தசரதன், துணை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அப்போது, பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர்.
    இப்போராட்டம் காரணமாக அதிகாலையில் வெளியூர்களுக்குச் செல்ல இருந்த பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai