சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கேரள கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கண்டித்து, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் மாவட்டச் செயலர் எஸ்.நீலகண்டன் தலைமை வகித்தார். இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், ஆர்எஸ்எஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எல்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பாஜக மாநிலச் செயலர் சந்திரமவுளி, விஎச்பி மாநில துணைத் தலைவர் மணியன் ஆகியோர் கேரள கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கண்டித்துப் பேசினர்.
    இதில், பாஜக மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.காந்தி, பாஜக கோட்ட அமைப்புச் செயலர் டி.எஸ்.குணசேகரன், மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, முன்னாள் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விஎச்பி மாவட்டத் தலைவர் ஸ்ரீபாலகிருஷ்ணன் உள்பட பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai