Enable Javscript for better performance
கல்லூரி விடுதி மாணவர்களுக்குவாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 02nd March 2017 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செய்யாறு அரசு கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி தலைமை வகித்தார். வேலைவாய்ப்புத் துறை கணக்கு அலுவலர் பி.மகேஷ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கீதாராணி, வட்டாட்சியர் ஜெயராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சிறப்பு விருந்தினராக செய்யாறு சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று, வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டித் தேர்வுகள், முப்படைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கல்லூரி படிப்புக்கு பின்னர் எந்தெந்தத் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெறலாம் என்பது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். பின்னர், மாணவர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.
    நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.ரமேஷ்குமார், இளநிலை அலுவலர்கள் சி.செல்வம், பா.ஏழுமலை, முன்னாள் படை வீரர் நலத் துறை அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai