Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியின் பண மதிப்பு நீக்க எதிர்ப்பு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் ராஜிநாமா- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சியின் பண மதிப்பு நீக்க எதிர்ப்பு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் ராஜிநாமா

    By DIN  |   Published on : 02nd March 2017 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சியில் பண மதிப்பு நீக்க எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவில் நியமனம் செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் திடீரென ராஜிநாமா செய்தனர்.
    இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில், பண மதிப்பு நீக்க எதிர்ப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக பண மதிப்பு நீக்க எதிர்ப்பு நடவடிக்கை குழு அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவரின் கீழ் இயங்கும் வகையில், குழு உறுப்பினர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் பெற்று வந்தார்.
    இதில் திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மா.வசந்தராஜின் கீழ் இயங்க அ.பழனியை தலைவராகவும், கே.மகேஷ் என்பவரை துணைத் தலைவராகவும், சி.சத்தியன், எம்.மணவாளன், ஜி.சந்தோஷ்குமார், என்.பாண்டு, சி.தயாளன், சி.பெருமாள், எஸ்.பிள்ளையார், ஏ.நசீர்அஹமத், பி.தனசேகரன், பி.ஆர்.காந்தி, ஏ.மதன்குமார், வி.உதயகுமார், பழக்கடை என்.குமார் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்து அதற்கான பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவருக்கு மாவட்டத் தலைவர் அனுப்பி வைத்தார்.
    ஆனால், மாவட்டத் தலைவர் அனுப்பிய பட்டியலில் உள்ள பெயர்கள் அனைத்தையும் உறுப்பினர்களாகக் கொண்டும், இந்தப் பட்டியலில் இல்லாத பெயர்களை குழுவின் தலைவர், துணைத் தலைவராக நியமனம் செய்தும் பட்டியல் வெளிவந்துள்ளது.
    இந்நிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர், நிர்வாகிகளின் விருப்பத்துக்கு எதிராக குழுமை மாற்றி அமைத்ததன் பின்னணியில் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி உள்ளதாகக் கூறி, இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 15 உறுப்பினர்களும் குழுவில் இருந்து ராஜிநாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
    மேலும், தங்களது ராஜிநாமா கடிதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், இந்தக் குழுவின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பீட்டர் அல்போன்ஸுக்கும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai