Enable Javscript for better performance
காட்டுப்பன்றி கடித்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே புதன்கிழமை மாலை காட்டுப்பன்றி கடித்ததில் பெண் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த சித்ரகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் (35). இவர், தனது கணவர் முருகனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். முனியம்மாள் புதன்கிழமை மாலை வீட்டுத் தோட்டத்தில் முள் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் காட்டுப்பன்றி ஓடி வந்தது.
    இதைப் பார்த்து பயமடைந்த முனியம்மாள் வீட்டுக்குள் ஓட முயன்றார். ஆனால், துரத்திச் சென்ற காட்டுப்பன்றி அவரை கடித்தது. அப்போது, அருகிலிருந்த அவரது சித்தப்பா வரதன் (50), முனியம்மாளை காப்பாற்ற முயன்றார். எனினும், அவரையும் கடித்துவிட்டு ஓடிய காட்டுப்பன்றி, நடேசன் என்பவரது விவசாயக் கிணற்றில் விழுந்தது.
    இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த வரதன், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேசூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai