சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை சன்னதி தெருவில், போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கனி தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோவை ஓட்டி வந்த திருவண்ணாமலை, தேரடி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (28), போலீஸாரை ஆபாசமாகத் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.
    மேலும், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai