சுடச்சுட

  

  வேட்டவலம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் விற்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
  வேட்டவலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  அப்போது, கோணலூர் கிராமம், பழைய காலனியில் 60 லிட்டர் சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்றதாக பஞ்சாட்சரம் மனைவி புஷ்பா (57) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, ராஜந்தாங்கல் கிராமத்தில் வீட்டில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றதாக ரமேஷ் (38), நாரையூர் கிராமத்தில் சாராயம் விற்றதாக அமாவாசை மனைவி கருப்பாயி (49) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 180 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai