சுடச்சுட

    

    ஜெயலலிதா பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்

    By DIN  |   Published on : 02nd March 2017 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், இராமசமுத்திரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
    கூட்டத்துக்கு தெள்ளாறு கிழக்கு ஒன்றியச் செயலர் டி.வி.பச்சையப்பன் தலைமை வகித்தார். தெள்ளாறு முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சி.சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, ஒன்றிய அவைத் தலைவர் எம்.நமச்சிவாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலர் சாம்பமூர்த்தி வரவேற்றார்.
    திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் சிறப்புரை ஆற்றினார். மேலும், 500 பேருக்கு தென்னங்கன்றுகள், வேட்டி, சேலை ஆகிய நல உதவிகளை அவர் வழங்கினார். மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா, பேரவை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தர்மதுரை, கல்விக்குழுத் தலைவர் எ.விஜய், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai