சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக விபத்து வழக்கு ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம்

  By DIN  |   Published on : 02nd March 2017 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக வாகன விபத்து வழக்கு ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
  தமிழகம் முழுவதும் வாகன விபத்துகளில் தொடர்புடைய வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், கீழ்பென்னாத்தூர், வெறையூர், களம்பூர் காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற வாகன விபத்துகளில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
  திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பணியின்போது, ஏராளமான வழக்கு ஆவணங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai