Enable Javscript for better performance
துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பிளஸ்-1 மாணவர் பலத்த காயமடைந்தார்.
     இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
     குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகன் மோகன்ராஜ்(17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலை மோகன்ராஜ் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள வனப் பகுதிக்கு சென்றார்.
     அப்போது, அங்கு நாட்டுத் துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்ததாகவும், அதனை நண்பர் எடுத்து சுட்டதில் மோகன்ராஜுக்கு வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
     இதையடுத்து, மோகன்ராஜ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai