சுடச்சுட

    

    சாத்தனூர் அருகே நகை அடகுக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    சாத்தனூரை அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (29). இதே பகுதியில் நகை அடகுக் கடை வைத்துள்ளார். செல்வமணி திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
    செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். மேலும், கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தனூர் அணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து
    வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai