சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார்.
    வெறையூரை அடுத்த ஆண்டியாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி காசிவேல் (47).
    இவர், சில தினங்களுக்கு முன்பு சு.வாழாவெட்டி கிராமத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, பாம்பு கடித்ததால் அவரை உடனிருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த காசிவேல் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai