மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
By DIN | Published on : 02nd March 2017 07:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஆரணி பகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அந்தக் கட்சியினர் புதன்கிழமை கொண்டாடினர்.
ஆரணி 2-ஆவது வார்டில் குட்டி நடராஜன் தலைமையில், அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினர். திமுக நிர்வாகிகள் சின்னக்குட்டிநாயக்கர், வேணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆரணியை அடுத்த விண்ணமங்கலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திமுக இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் வி.இரவி தலைமையில், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயராணிரவி, அந்தப் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் காளிதாஸ், கஜேந்திரன், இளைஞரணி நிர்வாகி மாமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ராஜன் தலைமையில், இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், வழக்குரைஞர்கள் அமுல்குமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.