சுடச்சுட

    

    திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் ராமகிருஷ்ணரின் 182-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
    கடலாடி சுவாமி விவேகானந்தர் மிஷன் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவண்ணாமலை சாரதா ஆஸ்ரமத் தலைவர் கிருஷ்ண பிரியா தலைமை வகித்தார்.
    மகாபாரத சொற்பொழிவு அமைப்பாளர் மோகனகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விவேகானந்தா மிஷன் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
    திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சிறந்த சீடர் என்ற தலைப்பிலும், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் ராமு, சிறந்த குருநாதர் என்ற தலைப்பிலும் பேசினர். இதில், தொழிலதிபர் துரை உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai