சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த கரியமங்கலம், சுண்டகாய்பாளையம் பகுதியில்  உள்ள சத்யம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜிதா செவ்வாய்க்கிழமை பரிசுகளை வழங்கினார்.
    இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் கு.வணங்காமுடி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முகமது வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷாஜிதா கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். அவர் பேசுகையில், "மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அரசுப் பணிக்கான தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். வாழ்க்கையில் விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம்' என்றார். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai