Enable Javscript for better performance
ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவருக்குசிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
    வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் இந்த சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
    இதையொட்டி, ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றன. பூஜையில் பங்கேற்ற மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ஹயக்கிரீவர் படம், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், டாக்டர் வெங்கடேசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai