சுடச்சுட

  

  கலசப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்: 3 பேர் பலத்த காயம்

  By DIN  |   Published on : 03rd March 2017 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
  கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பெண்கள் பலர், கோயிலை வலம் வந்தனர். அப்போது, இதே கிராமத்தைச் சேர்ந்த நலன் (25), பெண்களுக்கு இடையூறாக எதிர் திசையில் கோயிலை வலம் வந்தாராம். இதைக் கவனித்த கணேசன் (27), விஜயகுமார் (17) ஆகியோர் பெண்களுக்கு ஏன் இடையூறு செய்கிறாய் என நலனிடம் கேட்டனராம்.
  இதையடுத்து, அவர்களுக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டது. பின்னர், இருதரப்பினரையும் பொதுமக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், புதன்கிழமை விஜயகுமார், கணேசன் ஆகியோர் கடலாடியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்றிருந்தனர்.
  அங்கு வந்த நலன் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து விஜயகுமார், கணேசனை சரமாரியாகத் தாக்கினராம். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார், கணேசன், நலன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  சாலை மறியல்: இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகுமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்த
  10 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai