சுடச்சுட

    

    சாத்தனூர் அருகே சாலையோரக் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (45). இவர், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி சாத்தனூரில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அய்யம்பாளையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கிணற்றில் விழுந்தார்.
    இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகன் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, சாத்தனூர் அணை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai