சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    வேட்டவலத்தை அடுத்த கல்லாய்சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (51). இவர், திருவண்ணாமலையில் இருந்து காய்கனிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை வேட்டவலம் நோக்கி வேனில் புறப்பட்டார். திருவண்ணாமலை - விழுப்புரம் சாலை, கீரனூர் அருகே சென்றபோது, இருவர் சாலையைக் கடந்தனர்.
    அப்போது, அவர்கள் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் சதீஷ்குமார் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய வேன், சாலையைக் கடக்க முயன்ற வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த முபாரக் (50), சுசிலா (31) ஆகியோர் மீது மோதி கவிழ்ந்தது.
    இந்த விபத்தில் முபாரக், சுசிலா, வேனில் சென்ற அண்ணாமலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர், இவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai