சுடச்சுட

    

    செய்யாறு புறவழிச் சாலையில் தேவையில்லாத இடங்களில் இருந்த வேகத் தடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
    செய்யாறில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இருந்து திருவோத்தூர் மேம்பாலம் வரை நகருக்கு அருகாமையில் 3 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
    சுமார் ரூ.4.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த புறவழிச்சாலை செய்யாறு பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்துக்கு பேருதவியாக இருந்தது.
    எனினும், செய்யாறு புறவழிச்சாலையில் கொடநகர் - கோபால் தெரு சந்திப்பு, சந்தை சந்திப்பு, எல்லப்பா நகர் சந்திப்பு, புதிய காஞ்சிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 8-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. விரைவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில் அதிகமான வேகத்தடைகள் இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவானது.
    இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த பிப்ரவரி 26-ஆம் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், செய்யாறு புறவழிச் சாலையில் இருந்த தேவையில்லாத வேகத்தடைகளை செவ்வாய், புதன்கிழமைகளில் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai