சுடச்சுட

  

  தமிழ் நன்றாக கற்றவரை யாரும் வெல்ல முடியாது என்று காஞ்சிபுரம் பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி இராஜா சுவாமிகள் பேசினார்.
  வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி இராஜா சுவாமிகள் மேலும் பேசியதாவது:
  தமிழில் அம்மா என்ற சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை கொண்டதாகும். அம்மா என்ற சொல்லை அடிக்கடி உச்சரிப்பவர்கள் வேறு எந்தப் பயிற்சியும் செய்யாமலேயே நீண்ட ஆயுளுடன் வாழலாம். அந்த அளவுக்கு தமிழ்ச் சொற்கள் பெருமை வாய்ந்ததாகும். பல மொழிகளில் பிரார்த்தனை செய்தாலும் இறைவனுக்கு முதலில் கேட்கும் மொழி தமிழ். தமிழை சரியாக கையாண்டால் நாம் வெற்றியாளராக மாறலாம்.
  இந்தக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதை வெளிக்கொணர்ந்தால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம். நாம் சேர்க்கும் எந்த சொத்தும் நமக்கு நிரந்தரமல்ல. ஆனால், கல்வி மூலம் நாம் செய்யும் சாதனையே நிரந்தரம் என்றார். மேலும், இந்தக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பேச்சு, பாட்டு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அவர் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
  விழாவில் கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி உதவிப் பேராசிரியை கே.வரலஷ்மி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சரவணன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai