சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் பள்ளித் தலைமை ஆசிரியை வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை, அண்ணா நகர், 7-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வாசுகி (56). இவர், திருவண்ணாமலை, மேற்கு கோபுரத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்கிறார். வாசுகி கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
    பின்னர், புதன்கிழமை அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai