Enable Javscript for better performance
தூக்கிட்ட நிலையில் முதியவர் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கீழ்பென்னாத்தூரை அடுத்த குமரகுடி கிராம ஏரிக்கரையில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள வேப்பமரத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். புதன்கிழமை அந்த வழியாகச்  சென்ற பொதுமக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வள்ளிக்கு தகவல் அளித்தனர்.
    இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். போலீஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai