சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அருகே உள்ள ஸ்ரீஆதி ஐயப்பன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
    தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூரை அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் ஸ்ரீஆதி ஐயப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை இரவு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஸ்ரீஅரிபுத்திர சுவாமிகள் தலைமையில் 27 நட்சத்திர யாக குண்ட சாலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
    இதைத் தொடர்ந்து, மூலவர் ஆதி ஐயப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் செய்து ஜோதி ஏற்றும் விழா நடைபெற்றது.
    இரவு 8 மணிக்கு 108 பெண்கள் பால் குடங்களை ஏந்தி கோயிலை வலம் வந்து 27 அடி உயர மணிகண்டன் சுவாமி பாதத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai