சுடச்சுட

    

    திருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) வினாத்தாளை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரியில் உள்ள குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் அன்பரசன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பிரகாஷ், சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai