Enable Javscript for better performance
கள்ளத்தனமாக மது விற்பனை: 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தானிப்பாடி, தண்டராம்பட்டு, வெறையூர் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு, வெறையூர், தானிப்பாடி, வானாபுரம், தச்சம்பட்டு பகுதிகளில் அந்தந்த காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தீவிர சாராய விற்பனைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது, டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றதாக டி.கல்லேரி கிராமம் குமார் (38), தாழனோடை கிராமம் குப்பன் (60), கீழ்சிறுப்பாக்கம் கிராமம் பிச்சாண்டி (47), கொளமஞ்சனூர் ஜோதி (46), பூமிநாதன் (47), தானிப்பாடி குமாரி (39), சேர்ப்பாப்பட்டு நாகராஜ் (55), பழையனூர் காலனி பரசுராமன் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 12 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai